முதுகுவலி, இடுப்பு வாயு பிடிப்பை எளிதில் சரி செய்யனுமா?

 பொதுவாக இன்றைய பலரும் அடிக்கடி சந்திக்கும் பிரச்சினையாக முதுகுவலி, வாயு பிடிப்பு உள்ளது. இது பல காரணங்களால் ஏற்படுகின்றது. இதனை எளிய முறையில் போக்க ஒரு சில உடற்பயிற்சிகள் உதவுகின்றது.

அதில் உஸ்திரசனா ( Ustrasana)பெரிதும் உதவியாக இருக்கின்றது. தற்போது இதனை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

எப்படி செய்யலாம்?

  • விரிப்பில் முழங்காலிட்டு அமரவும். முட்டுக்களை அகலமாக விரித்து உட்காரவும்.
  • மார்பு, கழுத்தை சிறிது பின் நோக்கி வளைத்து தலையை பின்புறம் தொங்க விட்ட நிலையில் ஒவ்வொரு கையாக உடலின் பின் பகுதிக்கு கொண்டு சென்று விரல்களை ஊன்றிய குதிகால் பகுதிகளை பிடிக்கவும்.
  • வாய்மூடிய நிலையில் மூச்சை நன்றாக உள்வாங்கி வெளியிடவும்.
  • 15 வினாடிகள் இவ்விதம் இருந்த பின்பு ஒவ்வொரு கையாக முன் கொண்டு வந்து முழங்காலிட்டு அமரவும்.
  • இரண்டு நிமிட இடைவெளிக்குப்பின் மீண்டும் ஒரு முறை இந்த ஆசனம் செய்யலாம்.
  • முழங்கால் மூட்டுக்களிலுள்ள நச்சு நீர் குறையும். ஆஸ்த்துமா நோய் குறையும். இது ஒரு மருத்துவ ஆசனமாகும். தைராய்டு கிளாண்டுகள் இயக்கம் சீர்பெற உதவும்.

பலன்கள்

  • முதுகுத் தண்டின் வளையும் தன்மையும் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டமும் அதிகரிக்கின்றது.
  • முதுகுவலி, சுவாசக் கோளாறுகள், முழங்கால் வலி, இடுப்பு வலி இடுப்பு வாயு பிடிப்பு, கீழ் வாயு வாயுக் கோளாறு, இரைப்பை கோளாறுகள், முதலியவற்றிற்கு நல்லது.
  • தன்னம்பிக்கையினை வளர்க்கிறது. சோம்பலை நீக்கி பயிற்சியாளரைச் சுறுசுறுப்பாகவும் செய்கிறது.

குறிப்பு

இதய நோயுள்ளவர்கள் கவனமாகச் செய்யவும். குடல்வாயு நோயுள்ளவர்கள் இதைச் செய்ய கூடாது.