நாடு முழுவதும் பயணத்டை அமுலாக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணத் தடை அல்லது நாடு முடக்கப்படுவது என்பது சட்ட ரீதியாக செய்யப்படவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
அது மட்டுமல்ல பயணத்தடையின் போது வெளியில் செல்பவர் கைது செய்யப்படுகின்றனர் என்றால் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷவுக்கு மாத்திரம் எவ்வாறு பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.