இலங்கையின் ஒரு மாவட்டத்தில் கொரோனா பரவல் தீவிரம்… முக்கிய தகவல்!

நாட்டில் நேற்று பதிவான கொரோனா தொற்றாளர்களில் அதிகளவானோர் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 2,882 கொரோனா தொற்றாளர்களில் அதிகளவானோர் கம்பாஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

இம்மாவட்டத்தில் மாத்திரம் 541 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக கொழும்பு மாவட்டத்தில் 442 பேரும், களுத்துறையில் 241 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 205 பேரும் நேற்று பதிவாகியுள்ளனர்.

கண்டியில் 119 பேருக்கும், குருநாகலில் 195 பேருக்கும், காலியில் 145 பேருக்கும், யாழ்ப்பாணத்தில் 69 பேருக்கும், கேகாலையில் 162 பேருக்கும், புத்தளத்தில் 35 பேருக்கும், அநுராதபுரத்தில் 33 பேருக்கும் நேற்று கொவிட்-19 தொற்று உறுதியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறையில் 74 பேருக்கும், பொலனறுவையில் 38 பேருக்கும், அம்பாறையில் 40 பேருக்கும், இரத்தினப்புரியில் 93 பேருக்கும், பதுளையில் 30 பேருக்கும், மட்டக்களப்பில் 100 பேருக்கும் தொற்று உறுதியானது.

மொனராகலையில் 91 பேருக்கும், கிளிநொச்சியில் 12 பேருக்கும், திருகோணமலையில் 51 பேருக்கும், மாத்தளையில் 44 பேருக்கும் வவுனியாவில் 11 பேருக்கும் கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 180,593 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தொற்று உறுதியான 30,797 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றில் இருந்து இதுவரையில் 1,48,391 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.