இரவில் மாணவிகள் உணர்வை தூண்டும் விதத்தில் பேசுவார்!.. ஆசிரியர் ராஜகோபாலனின் லீலைகள் அம்பலம்

சென்னையில் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பள்ளிக்கூட ஆசிரியர் ராஜகோபாலனின் லேப்டாப்பில் கைப்பற்றப்பட்ட விடயங்கள் மற்றும் என்னவெல்லாம் சேட் செய்தார் என்பது குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

பத்ம ஷேசாத்ரி பால பவன் பள்ளியில் பணியாற்றி வந்தவர் ஆசிரியர் ராஜகோபாலன் (59). இவர் மாணவிகளிடம் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்து வந்த வழக்கு விஸ்வரூபம் எடுத்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜகோபாலன் பயன்படுத்திய செல்போன், லேப்டாப்பை பறிமுதல் செய்த பொலிசார் அதில் அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டெடுத்துள்ளனர்.

அதில் இருந்த தகவல்கள் குறித்து அதிகாரி ஒருவர் கூறிகையில், ராஜகோபாலன் வாட்ஸ்அப்பில் மாணவிகளின் செல்போன் நம்பர்களுக்கு மெஸேஜ்களை அனுப்பி சேட்டிங் செய்வதில் ஆர்வம் காட்டிவந்திருக்கிறார்.

ஒரு சில மாணவிகளிடம் பாடத்தை தவிர்த்து அவர்களின் அழகை வர்ணித்து ஆபாசமாக மெஸேஜ்களை செய்ய தொடங்கியிருக்கிறார்.

இரவு நேரங்களில் மாணவிகளிடம் வாட்ஸ்அப் அழைப்பில் பேசி வந்திருக்கிறார். அப்போதும் அவர் பாலியல் உணர்வைத் தூண்டும் வகையில் பேசி வந்திருக்கிறார்.

இரட்டை அர்த்தங்கள் கொண்ட படங்கள், எஸ்.எம்.எஸ்களை மாணவிகளுக்கு அதிகளவில் ராஜகோபாலன் அனுப்பி வைத்திருக்கிறார்.

அதை புரிந்து கொள்ளத் தெரியாத சில மாணவிகள் தொடர்ந்து பேசும் போது, அடுத்தப்படியாக வீட்டுக்குத் தெரியாமல் சினிமாவுக்கு போகலாமா, வெளியில் செல்லலாமா என மெஸேஜ்களை அனுப்பி வந்திருக்கிறார்.

அதற்கு ஒப்பு கொண்ட மாணவிகளுடன் வெளியிலும் சென்று வந்திருக்கிறார். ஒரு மாணவியின் அழகை வர்ணித்த ராஜகோபாலன், நீ இந்தச் சேலையில் அழகாக இருக்கிறாய். ஆனால் சேலை அணியாமல் இருந்தால் இதைவிட அழகாக இருப்பாய் என்று மெஸேஜ் அனுப்பியிருக்கிறார்.

இதுபோன்ற மெஸேஜ்கள் யாருக்கெல்லாம் ராஜகோபாலன் அனுப்பியிருக்கிறார் என்ற விவரத்தை சேகரித்திருக்கிறோம் என கூறியுள்ளார்.