45 வயதிலும், சிக்கென்று இருக்கும் சிம்ரன்..

கொரோனா வைரஸின் 2-வது அலை தற்போது இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகின்றது. அதுதுடன் நிறைய உயிர்களை இந்த இரண்டவது அலை பலி வாங்கி வருகின்றது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

அத்துடன், தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வையும் அரசும் ஏற்படுத்தி வருகின்றது. இருப்பினும், அன்றாடம் வருகின்ற இறப்பு செய்திகள் அனைவரையும் மனா உளைச்சலுக்கு ஆளாக்கி வருகின்றது.

இதன் காரணமாக பல்வேறு பிரபலங்களும் தங்களது வீட்டில் இருந்தவாறு தங்களுக்குப் பிடித்த விஷயங்களை செய்து வருகின்றனர். மேலும், பலரும் கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது நடிகை சிம்ரன் லாக்டவுனில் இருக்கையில் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த வயதிலும் தனது உடலை மிகவும் ஃபிட்டாக வைத்திருக்கின்ற சிம்ரனை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.