கொரோனாவுக்கு 103 வயது மூதாட்டி பலி!!

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 103 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த அதிக வயதானவர் இவராவார்.

காலி மாவட்டத்தின் கினிமெல்லக தெற்கை சேர்ந்த குறித்த மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மூதாட்டி சுமார் இரண்டு மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்ட 22 ஆம் திகதி வீட்டில் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து சடலம் கராபிட்டி போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சோதனை மேற்கொண்ட நிலையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

நேற்று (23) கராபிட்டி போதனா வைத்தியசாலையின் நீதித்துறை மருத்துவர் முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் கோவிட் நிமோனியாவால் மூதாட்டியின் உயிரிழப்பு ஏற்பட்டதாக பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.