ராட்சசன் காமுக வாத்தியை போல, சென்னை பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன்?..! அதிர்ச்சி தகவல்.!!

சென்னையில் உள்ள பத்மசேஷாத்ரி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ராஜகோபாலன். இவர் எந்த நேரமும் பள்ளியில் பயின்று வரும் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுதல், பாலியல் தொல்லை கொடுத்தால் என அட்டகாசம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

காமுக ஆசிரியனின் இந்த தொல்லையால் பல்வேறு மாணவிகள் தங்களின் படிப்பை துறந்துவிட்டு சென்றதாகவும், மாற்று பள்ளிகளுக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா ஊரடங்கால் இணையவழிகளில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இணையவழி பாடங்கள் நடத்த வரும் காமுக ஆசிரியர் ராஜகோபால், மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி பாலியல் தொல்லை கொடுப்பது, காணொளியில் ஆபாசமான செய்கைகள் செய்வது என அட்டகாசம் செய்துள்ளார்.

காமுக ஆசிரியர் பல வருடமாக இவ்வாறான அட்டகாசத்தால் ஈடுபட்டு வந்த நிலையில், பள்ளி நிர்வாத்திடம் புகார் அளித்தும் பலனில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், காமுக ஆசிரியரின் கொடூரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.


இதனையடுத்து, பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், திமுக எம்.பி கனிமொழி உட்பட அரசியல் கட்சியினர் மற்றும் பெண்ணிய ஆர்வலர்கள் போன்றோர் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீதும், பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், பத்ம சேஷாத்ரி பள்ளிக்கு நேரில் சென்றுள்ள சென்னை அசோக் நகர் காவல் துறையினர், பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளியில், இணைய வகுப்புகளில் இதுபோன்ற பிரச்சனை ஏற்பட்டால், உடனடியாக பெற்றோரிடம் தெரியப்படுத்தி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் எனவும் காவல் துறையினர் அறிவுறுத்துகின்றனர்.

இந்த சம்பவம், ராட்சசன் திரைப்படத்தில் வரும் காமுக ஆசிரியரின் கதாபாத்திரத்தை ஒத்திருக்கும் நிலையில், இந்த தகவல் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.