கொரோனாவால் மனைவியை இழந்துள்ள அருண்ராஜா காமராஜ் தற்போது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
சிந்துஜாவின் மறைவு தமிழ் திரையுலகம் மற்றும் தமிழக மக்களை துயரத்தில் ஆழ்த்தியது. மனைவியைப் பிரிந்து வாடிய அருண்ராஜா நிலை காண்போரைக் கலங்கச் செய்தது.
தற்போது அருண்ராஜா காமராஜ் இந்தப் பெருந்தொற்று காலத்தில் மக்கள் ஒற்றுமையுடன் இந்தக் கிருமியை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் அவர் தனது முகநூலில், நீண்ட பதிவு ஒன்றினை வெளியிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
https://www.facebook.com/DirArunrajaKamaraj/posts/4094083990630811







