யாழ்ப்பாணத்தில் மணல் லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு

யாழ் மணற்காடு – மாவடி பகுதியில் கட்டளையை மீறி பயணித்த மணல் லொறி மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று பகல் 1 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் கூறினர்.

இதன்போது பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற லொறியின் டயரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில், லொறியை செலுத்திய துன்னாலை பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.