யாழில் கொரோனா பரவல் தீவிரம்

யாழ்.மாவட்டத்தில் 62 பேர் உட்பட வடக்கில் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

இதன்படி யாழ்.மாவட்டத்தில் 62 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 6 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 6 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் 62 பேருக்கு தொற்று.

யாழ்.போதனா வைத்தியசாலையில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை வைத்தியசாலையில் 3 பேருக்கும், பருத்துறை வைத்தியசாலையில் ஒருவருக்கும், சாவகச்சோி வைத்தியசாலையில் ஒருவருக்கும், ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் ஒருவருக்கும், மானிப்பாய் வைத்தியசாலையில் ஒருவருக்கும், கோப்பாய் வைத்தியசாலையில் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 31 பேருக்கும், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேருக்கும், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேருக்கும், யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், சாவகச்சோி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், யாழ்.சிறைச்சாலையில் 4 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்கு தொற்று.

மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பேருக்கு தொற்று. முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் 6 பேருக்கு தொற்று.

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 3 பேருக்கும், செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் 6 பேருக்கு தொற்று.

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேருக்கும், கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.