கொரோனாவால் பாதிக்கப்பட்டவரா நீங்கள்! இந்த தவறை மட்டும் செய்தீடாதீங்க…

அதிவேகமாக கொரோனா நோய்த்தொற்று பரவிக் கொண்டிருக்கிறது. கொரோனாவின் முதல் அலையை விட இரண்டாம் அலையில் ஏராளமான மக்கள் உயிரிழக்கிறார்கள்.

ஆரம்பத்தில் லேசான அறிகுறிகளை அனுபவித்த பலரது நிலைமை திடீரென்று மோசமாக மாறி, மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியவாறு மாறுகிறது. பொதுவாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமையை மோசமாக்குவது சைட்டோகைன் புயல் மற்றும் ஹாப்பி ஹைபோக்ஸியா. இவை இரண்டும் தான் குறுகிய காலத்தில் கொரோனா வழக்கை மோசமாக்கக் கூடிய தீவிர காரணிகளாகும்.

எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பதைத் தடுக்க, தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே ஒருசில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் லேசான அறிகுறிகளை சந்தித்தாலும், அதைப் புறக்கணிக்கக்கூடாது. ஏனெனில் பல காரணிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமையை சிக்கலாக்குகின்றன.

கீழே லேசான கொரோனா தொற்று இருக்கும் போது கட்டாயம் தவிர்க்க வேண்டிய சில தவறுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த தவறுகளைத் தவிர்த்தால் கொரோனா தொற்று தீவிரமாவதைத் தடுக்கலாம்.

தனிமைப்படுத்தாமல் இருப்பது

ஒருவர் கொரோனாவின் லேசான அறிகுறிகளை சந்தித்தாலும், உடனே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதோடு சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். ஒருவேளை நீங்கள் மற்ற நோய்த்தொற்றுகளுக்கான அறிகுறிகளை சந்தித்தாலும்,சரியான நேரத்தில் பரிசோதனையை செய்ய வேண்டும்.

சரியான நேரத்தில் நோயறிதல் என்பது மற்றவர்களுக்கு தொற்று பரவுவதைத் தடுக்கும். மேலும் உடல் ஆரோக்கியமும் மோசமாவதைத் தடுக்க தகுந்த சிகிச்சையை மேற்கொள்ள முடியும்.

ஸ்டெராய்டு சிகிச்சையை மிக விரைவில் தொடங்குவது

கடுமையான வீக்கம் மற்றும் தீவிரத்தன்மைக் குறைக்கவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு ஸ்டெராய்டுகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

இருப்பினும், எல்லா கோவிட் வழக்குகளுக்கும் ஸ்டெராய்டுகளின் பயன்பாடு தேவையில்லை. கண்மூடித்தனமான பயன்பாடு அல்லது லேசான தொற்றுநோய்களின் போது அவற்றைப் பயன்படுத்துவது சிக்கல்களை ஏற்படுத்தும்.

ஸ்டெராய்டுகள் கொரோனாவை முழுமையாக குணப்படுத்துவதில்லை மற்றும் இது வெறும் சிகிச்சைக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன என்பதை ஒவ்வொருவரும் தெரிந்திருக்க வேண்டும். எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், வீட்டில் தனிமைப்படுத்தி இருப்பவர்கள், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெராய்டுகளை அதிகம் பயன்படுத்தினால், அது மியூகோமிகோசிஸ் அல்லது கருப்பு பூஞ்சை தொற்று போன்ற கடுமையான சிக்கல்களை ஏற்படுத்திவிடும்.

சரியான நேரத்தில் கொரோனா மருத்துவரை அணுகாதிருப்பது

கோவிட் பாசிட்டிவ் பெற்ற பெரும்பாலான மக்கள் செய்யும் மிகப்பெரிய தவறு, கொரோனா வைரஸ் சிகிச்சை தொடர்பான ஒரு சிறப்பு மருத்துவரை அணுகாமல் இருப்பது. நீங்கள் அனுபவிக்கும் அறிகுறிகள் பிற நோய்த்தொற்றுகளுடன் ஒத்திருந்தாலும், கொரோனா மருத்துவரை அணுகினால் தான், அறிகுறிகளுக்கு ஏற்ப அவரால் உங்களுக்கு மருந்துகளை வழங்கி, காப்பாற்ற முடியும்.

எனவே ஒரு சிறப்பு மருத்துவரை அணுகி, சரியான வழிகாட்டுதல்களைப் பெற்று விரைவில் மீளுங்கள்.

சோதனையை தாமதப்படுத்துவது

கொரோனாவின் அறிகுறிகள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான அறிகுறிகளைக் கொண்டிருப்பதால், பலர் தாமதமாக பரிசோதனையை செய்கிறார்கள். தாமதமான சோதனையும், கண்டறிதலும், ஆரோக்கியமான கொரோனா நோயாளிகளின் நிலைமையை மோசமாக்குவதற்கான முக்கிய காரணங்களுள் ஒன்றாகும்.

ஆக்சிஜன் அவை சரிபார்க்காமல் இருப்பது

கொரோனா இரண்டாம் அலையில் ஏராளமானோர் ஆக்சிஜன் குறைபாட்டினை சந்திப்பதால், உடலில் ஆக்சிஜன் அளவு சரியாக உள்ளதா என்பதை கவனிக்க வேண்டியது அவசியம்.

உடலில் உள்ள ஆக்சிஜன் அளவில் சிறிது ஏற்ற இறக்கம் ஏற்பட்டாலும், உடனே மருத்துவரிடம் இதை தெரிவிக்க வேண்டும். அதேப்போல் காய்ச்சலானது 7 நாட்களும் குறையாமல் இருந்தால், அதுவும் ஒரு எச்சரிக்கை அறிகுறியாகும். இந்நிலையில் நோயாளிகள் ஒரு மணிநேர/2 மணிநேரத்திற்கு ஒருமுறை தங்களின் அறிகுறிகளை கவனிக்க வேண்டியது அவசியமாகும்.

குறிப்பாக சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் உள்ள கொரோனா நோயாளிகள், அடிக்கடி தங்களின் இரத்த சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்த அளவையும் அடிக்கடி கண்காணிக்க வேண்டும்.

கோவிட் சோதனை முடிவுக்காக நீண்ட காலம் காத்திருப்பது

கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சிலரது கோவிட் சோதனை முடிவுகள் வருவதற்கு சற்று தாமதமாகலாம்.