மனைவியை துடி துடிக்க கொலை செய்த கணவனின் வாக்குமூலம்

தமிழகத்தில் மனைவியை துடி துடிக்க கொலை செய்த கணவன், அவள் என் ஆசைக்கு இணங்கவில்லை, அதுவே நான் கொலை செய்ய காரணம் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ், 42 வயதான இவர் வெள்ளிச்சந்தை பகுதியில் வாகனங்களுக்கு சீட் கவர் செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இவருக்கும் ஈத்தங்காடு கிராமத்தை சேர்ந்த 33 வயது மதிக்கத்தக்க உமா என்பவருக்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு மகன் மற்றும் மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

கணவர் ரமேஷ் கடை நடத்தி வரும் நிலையில் டெய்லரிங் படித்த உமா வீட்டிலேயே இருந்து தெரிந்த நபர்களுக்கு துணி தைத்து கொடுக்கும் வேலை செய்து வந்துள்ளார்.

இதனால் உமாவின் வீட்டிற்கு அடிக்கடி வெளிநபர்கள் பலர் வந்து சென்றுள்ளனர். இதனால் ரமேஷ், தனது மனைவி மீது சந்தேகம் அடைந்துள்ளார். இதன் காரணமாக கடந்த சில வருடங்களாக இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில், திடீரென்று அவர் சம்பவ தினத்தன்று கழுத்தை அறுத்து துடி துடிக்க கொலை செய்தார்.

இதையடுத்து தலைமறைவான அவரை பொலிசார் தேடி வந்தனர். அவர் வெள்ளிமலை பகுதியில் தலைமறைவாக இருந்தை கண்டுபிடித்த பொலிசார், அவரை பிடித்து விசாரணை

அப்போது, கடந்த ஒரு வருடமாக எனது மனைவி உமா என்னை அலட்சியப்படுத்தி வந்தார். என்னிடம் சரியாக பேசுவதில்லை. உறவுக்கார ஆண்களிடம் அவள் சிரித்து பேசி பழகுவது எனக்கு பிடிக்கவில்லை.

இது மட்டுமல்லாமல் எனது ஆசைக்கு இணங்கவும் மறுத்து வந்தார். இதனால் உமா மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவளை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். அதன்படி சம்பவத்தன்று அரிவாளால் வெட்டி மனைவியை கொலை செய்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.