சென்னையில் தடையை மீறி பிக்பாஸ் படப்பிடிப்பு, அதிகாரிகள் புகுந்து நிறுத்திவைப்பு.! வெளியான தகவல்!

கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி காரணமாக அரசு அறிவிக்கின்ற வரை பரப்பிடிப்பு நடத்த கூடாது என்று தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்து இருக்கின்றது. வைரஸ் பரவல் குறைந்த பின்னர், அரசு அனுமதி கொடுத்த பிறகு தான் படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதுமே படப்பிடிப்புற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது. இத்தகைய சூழலில், EBV பிலிம் சிட்டியில் மட்டும் பிக்பாஸ் 5-ற்கான படப்பிடிப்பு நடந்து வருகின்றது.

இத்தகைய நிலையில் சென்னை பூந்தமல்லியில் கடந்த சில நாட்களாக ஈவிபி பிலிம் சிட்டியில் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான சூட்டிங் நடைபெற்று வருகின்றது. அரசு படப்பிடிப்புக்கு தடை விதித்த பின்னரும் கூட தொடர்ந்து சூட்டிங் நடந்து வந்தது.

இதில், 150 பேர் கலந்து கொண்டு இடைவிடாது சூட்டிங் நடத்தி வந்துள்ளனர். இதில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், படப்பிடிப்பு நிறுத்தப்படாமல், இது குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்த காரணத்தால், உதவி கமிஷனர் சுதர்சனம் பூந்தமல்லி தாசில்தார், ஆகியோர் பிலிம் சிட்டிக்குள் சென்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.