முள்ளிவாய்க்கால் செல்லும் வீதிகளை மூடும் பொலிஸார்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்துக்கு நுழையும் அனைத்து பாதைகளையும் தடை செய்வதற்கு பொலிசார் வீதிக் தடைகளை இடுவதற்கு பொருட்கள் கொண்டு வந்து இறங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மே 18 ஆம் திகதி இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் வருடம் தோறும் தமிழ் மக்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைந்து உலகம் பூராகவும் உள்ள தமிழ் உறவுகள் மே 12 தொடக்கம் 18 வரை இனப்படுகொலை வாரத்தை அனுஷ்டிக்கின்றனர்.

அதோடு, மே 18 ம் திகதி அஞ்சலி நிகழ்வுகளையும் அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்தில் மே 18 பாரிய அளவில் நினைவேந்தல் நிகழ்வு வருடம்தோறும் இடம்பெறும் .

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நினைவேந்தல் நிகழ்வினை நடாத்த 27 பேருக்கு எதிராக பொலிசார் நீதிமன்றில் தடை உத்தரவு பெற்றுள்ள அதேவேளை இன்றும் சுமார் 20 பேருக்கு மேல் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெறவுள்ளதாக அறியமுடிகிறது.

இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்துக்கு நுழையும் அனைத்து பாதைகளையும் தடை செய்வதற்கு பொலிசார் முயற்சிப்பதாக கூறப்படுகின்றது.

மேலும்  முல்லைத்தீவு பரந்தன் வீதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்துக்கு நுழையும் கப்பல் வீதி சந்தியில் பொலிஸ் நீதித்துறை போடப்பட்டு சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடதக்கது.