திருகோணமலை மாவட்டத்தில் மேலும் 13 தொற்றாளர்கள் கண்டறிவு

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்திற்குள் 13 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் இன்றைய (15) தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் உப்புவெளி சுகாதார பிரிவில் 09 பேரும், திருகோணமலை சுகாதார சேவை பிரிவில் 02பேரும், மூதூர் சுகாதார பிரிவில் 02 பேரும் என நேற்றுக் காலை 10.00 மணி தொடக்கம் இன்று காலை 10.00 மணி வரையான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது வரையில் மொத்தமாக திருகோணமலை மாவட்டத்தில் 2095 தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் 26 மரணங்கள் கொவிட்19 காரணமாக பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.