அடடே… ஆரஞ்சு பழத்துக்கு இப்படிப்பட்ட மகத்துவமா?…

புரோட்டின், நார்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி-6, தயாமின், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் ஆரஞ்சு பழத்தில் அதிகளவு உள்ளது. இதில் இருக்கும் ஆண்டி ஆக்சிடண்டுகள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலுக்கு தேவையான உயிர் சத்துக்களையும் வழங்குகிறது.

ஆரஞ்சு பழத்தில் உள்ள போலேட் என்ற ஊட்டச்சத்து ஆரோக்கியமான விந்தணுக்கள் உருவாக துணை புரிந்து, குழந்தைகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. அதிகளவு ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை ஏற்படுவது குறையும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டால் இரத்த குழாய்களில் சேரும் கெட்ட கொழுப்புகள் அகற்றப்படுகிறது. இதனால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாது. ஜீரண சக்தியை அதிகரித்து உடலுக்கு தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றுகிறது.

ஆண்டி ஆக்சிடண்டுகள் உடலில் புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை அளிக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், தினமும் உணவுக்கு முன்னதாக ஆரஞ்சு பழச்சாறை குடித்து வந்தால் உடல் எடை குறையும். தினமும் ஒரு ஆரஞ்சு பழம் பெண்கள் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் 50 விழுக்காடு குறையும்.

இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த ஆரஞ்சு உதவுகிறது. ஆரஞ்சில் இருக்கும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. ஆண்களின் விந்தணுக்களை அதிகரிக்கவும், ஆரோக்கியமானதாக மாற்றி மலட்டுத்தன்மை பிரச்சனை ஏற்படாமல் இருக்கவும் உதவி செய்கிறது.

வாயில் துர்நாற்ற பிரச்சனை இருப்பவர்கள் ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வரலாம். ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்ற பிரச்சனை மட்டுமல்லாது ஈறுகளில் வீக்கம், சொத்தை பல், வாயில் உள்ள கிருமிகளை கட்டுப்படுத்த உதவும். தூக்கமின்மையால் அவதியுறுபவர்கள் ஆரஞ்சு பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.