கொரோனா பாதிப்பு காரணமாக பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினமும் அதிகரித்து கொண்டு வந்த கொரோனா பரவலின் காரணமாக மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
இந்நிலையில், பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தார். இன்று சிகிக்சை பலன் அளிக்காமல் நடிகர் பாண்டு உயிரிழந்தார்.
நடிகர் பாண்டு நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் அதிகம் நடித்துள்ளார். இவருடைய சகோதரர் இடிச்சப்புளி செல்வராசு என்பவரும் நகைச்சுவை நடிகராவார். இவர் திரைப்படங்களோடு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தினம் தினம் தீபாவளி, உறவுகள் சங்கமம், வள்ளி போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு உயிரிழந்தது, திரைத்துறையினர் மத்தியில் சோகத்தையும், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.