சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வெளியே வரிசையாக காத்துகிடக்கும் ஆம்புலன்ஸ்கள்! தலைநகரில் மோசமடையும் நிலைமை….

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு வெளியே ஆம்புலன்ஸ்கள் வரிசையாக காத்து கிடக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

கொரோனா பரவல் தமிழகத்தில் தீவிரமாக அதிகரித்துவருவதால் மே 6ம் திகதி முதல் மேலும் பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.

அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் மட்டும் இயங்கலாம். அனைத்து பொதுப் போக்குவரத்து வசதிகளிலும் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பொதுமக்கள் அமர்ந்து பயணம் செய்யலாம். கடைகளை 12 மணியோடு மூட வேண்டும் என பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழகத்தில் நோற்று மே 4ம் திகதி மட்டும் 21,228 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதியானது, 144 பேர் உயிழந்துள்ளனர்.

சென்னையில் மட்டும் 6228 பேருக்கு புதிதாக தொற்று உறுதியானது, 36 பேர் உயரிழந்துள்ளனர்.

அதேசமயம் சென்னையில் தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கை வசதி தட்டுப்பாடு உள்ளதாக கூறப்படுகிறது.

அதை உறுதிப்படுத்தும் விதமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு வெளியே ஆம்புலன்ஸ்கள் வரிசையாக காத்துக்கிடக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.


மே 3ம் திகதி இரவு 11.55 மணிக்கு குறித்து வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் உள்ள மற்றொரு அரசு மருத்துவமனையான ஸ்டான்லி மருத்துவமனையிலும் ஆம்புலன்ஸ்கள் காத்துகிடக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.