வழக்கறிஞர் வீட்டு குளியலறையில் கொன்று புதைக்கப்பட்ட கணவரை பிரிந்து வாழ்ந்த ஆசிரியை! நடந்தது என்ன?

தமிழகத்தில் யோகா ஆசிரியை ஒருவர் வழக்கறிஞர் வீட்டின் குளியலறைக்குள் கொன்று புதைக்கப்பட்ட சம்பவத்தில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை விவாகரத்து பெற்று 10 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார்.

அவர் வசிக்கும் பகுதியில் இருந்த சித்ராதேவி என்ற யோகா ஆசிரியையும் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் ஹரிகிருஷ்ணனின் மகளுக்கு யோகா கற்று தந்தார்.

தனது மகளை யோகா வகுப்பிற்கு அனுப்புவதற்காக வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் சென்று வந்தபோது சித்ரா தேவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் அடிக்கடி சந்திந்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம்தேதி சித்ராதேவி இரு சக்கர வாகனத்துடன் மாயமானார்.

இது குறித்து அவரின் தந்தை கண்ணையா பொலிசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தேர்தலை காரணம் காட்டி வழக்கை கிடப்பில் போட்டுள்ளனர்.

மேலும் வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் தனது மகளை கொலை செய்து இருக்கலாம் எனவும் கண்ணையா மனு அளித்தார்.

இந்த நிலையில் செவ்வாய்க் கிழமை காலை வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதை கண்ட அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஹரிகிருஷ்ணன் உடலை கைப்பற்றினர்.

வீட்டில் ஹரிகிருஷ்ணன் தனது கைகளால் எழுதிவைத்த கடிதமும் எடுக்கப்பட்டது.அந்த கடிதத்தில் சித்ராதேவியை தானே கொலை செய்து குளியலறையில் புதைத்து இருப்பதாகவும் இது அனைத்தும் தானே செய்ததாகவும், தனது சாவுக்கு வேறு யாரும் காரணம் அல்ல எனவும் கொலை செய்த குற்றத்தை பொறுக்க முடியாமல், தனக்குத்தானே தண்டனையை கொடுத்துக் கொண்டதாகவும் எழுதியிருந்தார்.

சித்ராதேவியை வீட்டுக்கு அழைத்து வந்தபோது அவர்களுக்குள் நடத்தை தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் கைகலப்பு நடந்துள்ளது.

அந்த ஆத்திரத்தில் ஹரி கிருஷ்ணன் அவரை அடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதற்கிடையே காவல்துறையினரின் அலட்சியப் போக்கினால், தனது மகள் உயிர் பலியாகியுள்ளதாக சித்ரா தேவியின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.