தாயுடன் சேர்ந்து நடனமாடி அசத்திய இந்திய கிரிக்கெட் அணி வீரரின் மனைவி!

இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுவேந்திர சாஹலின் மனைவி தனது தாயாருடன் சேர்ந்து நடனமாடியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் தற்போது ஐபிஎல்லில் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார்.

இவருக்கும் தனஸ்ரீ சர்மா என்ற பெண்ணுக்கும் கடந்த டிசம்பரில் திருமணம் நடந்தது. தனஸ்ரீ மருத்துவர், நடன கலைஞர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஆவார்.

தனஸ்ரீ மனைவி தனது நடன திறமையால் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளார். அதுபற்றிய வீடியோக்களையும் சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், சர்வதேச நடன தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தனஸ்ரீ தனது தாயாருடன் சேர்ந்து நடனம் ஆடிய வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அவர்கள் இருவரும், முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்த டால் என்ற இந்தி திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலின் இசைக்கு ஏற்ப நடனம் ஆடியுள்ளனர்.