108 நாடுகள் பங்கேற்ற உலக அழகிபோட்டியில் வென்ற மானுஷியிடம் கேட்ட கேள்வி இதுதானா?

கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் உலக அழகி போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த ட்டா ஃபிரியா(1966),ஐஸ்வர்யா ராய்(1994),டயானா ஹேடன்(1997),யயுக்தா மூகே(1999),பிரியங்கா சோப்ரா(2000) ஆகியோர் பட்டம் வென்றதை அடுத்து 17 ஆண்டுகளுக்கு பின் மானுஷி சில்லர் பட்டத்தை கைப்பற்றினார்.

பல சுற்றிகள் நடைபெற்ற சீனாவின் சன்யா சிட்டி அரினாவில் 108 நாடுகள் பங்கேற்ற மிஸ் வோல்டு அழகிப் போட்டியில் மருத்துவப் பட்டப் படிப்பை பயின்ற ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மனுஷி சில்லார்(20) வெற்றியை பெற்றார்.

மானுஷி சில்லாரை கேட்ட கேள்வி இதுதான். உலகில் அதிகம் சம்பளம் பெருவதற்கான தகுதியடைய வேலை எது? ஏன்? உலகிலேயே அதிகம் மதிப்பிற்குரியவர் தாய், அதிக சம்பளம் பெரும் தகுதியுடைவர்களும் அவர்களே தான். மேலும் சம்பளம் என்பது வெறும் பணம் மட்டும் கிடையாது என்னைப் பொறுத்தவரை அது அன்பும், மரியாதையும்.

நமக்காக பல தியாகங்களைச் செய்தவர்கள் அவர்கள், ஆகையால் உலகிலேயே அதிகமான சம்பளமாக அன்பையும், மரியாதையையும் பெற தகுதியானவர்கள் தாய் மட்டும் தான் என்று கூறி பட்டத்தை வென்றார் மானுஷி சில்லர்.