மெழுகு சிலையாக இருக்கும் ஊர்வசி ரவுட்டாலா.! ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவவும் வீடியோ!!.!

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி அருள் சரவணன் ஏற்கனவே தனது கடையின் விளம்பர படங்களில் பலர் முன்னணி நடிகைகளுடன் நடித்தவர். ஆனால், இவரை பலரும் சமூக வலைதளங்களில் கேலி கிண்டல் செய்தனர்.

ஆனால் இதை எதையும் பொருட்படுத்தாமல் அருள் சரவணன் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி ஒரு படத்தில் நடிகராக நடிக்க உள்ளார். அந்தப்படத்தை அவரை வைத்து விளம்பரப் படங்களை இயக்கிய ஜேடி-ஜெர்ரி என்ற இயக்குனர்கள் இயக்க உள்ளனர். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். மேலும், பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மணலியில் நடைபெற்று வருகிறது. இதில், அண்ணாச்சி அருண் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடிக்கிறார். பாலிவுட் சன்னி லியோனான ஊர்வசி ரவுத்தீலாவின் புகைப்படங்கள் தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலாகி வருகின்றது.