இந்தியாவில் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தற்போது 2 ஆயிரத்திற்கும் அதிகமாகியுள்ளது.
குறிப்பாக சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
இதனிடையே, இதனை தடுக்கும் வகையில் ஏப்ரல் 2-வது வாரம் முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிலும், குறிப்பாக இரவு நேர ஊரடங்கு, தனியார் துறை ஊழியர்களை வீட்டில் இருந்து பணியமர்த்தல் ஆகியவை அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், சென்னை, கோவை, செங்கல்ப்பட்டு உள்ளிட்ட கொரோனா பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.
கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட 4 ஆம் மற்றும் 5-ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் மீண்டும் செயல்படுத்த வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கின்றனர். இதனால் தேர்தலுக்கு பின்னர் இவ் அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.