குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தேர்வான இரண்டு பைனலிஸ்ட் (Finalist)- யார் யார் தெரியுமா?

தொலைக்காட்சி ரசிகர்களின் உயிர் மூச்சாக இருப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். முதல் சீசனில் இருந்த கலாட்டாவை விட இந்த இரண்டாவது சீசன் படு காமெடியாக உள்ளது.

ஆனால் என்ன சோகம் என்றால் ஒரு சில நிகழ்ச்சியில் பிரபலங்கள் யாராவது வராமல் போய் விடுகின்றனர். புகழ், பாபா பாஸ்கர், ஷகீலா, பவித்ரா, மணிமேகலை என இவர்கள் ஒரு சில நிகழ்ச்சியில் இல்லை.

கடந்த சீசனில் இப்படியெல்லாம் நடந்தது இல்லை. சரி வாரா வாரம் இந்நிகழ்ச்சியை கண்டு கொண்டாடி வரும் நாம் ஒரு விஷயத்தை மறந்துவிட்டோம்.

அது என்னவென்று யோசிக்கிறீர்களா, ஒன்றும் இல்லை நிகழ்ச்சி பைனலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த வாரம் இறுதி போட்டிக்குள் நுழையப்போவது யார் என்பது தெரிய வரப்போகிறது.

அதன் பிறகு இறுதி நிகழ்ச்சி தான், பின் நாம் அனைவருமே இந்த நிகழ்ச்சியை மிஸ் செய்யப்போகிறோம்.

சரி நாம் விஷயத்திற்கு வருவோம், இந்த வாரம் நடந்த போட்டியில் தற்போது அஸ்வின் மற்றும் கனி இறுதி நிகழ்ச்சிக்கு தேர்வாகியுள்ளனர்.

அவர்கள் ஒன்றாக நின்று எடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialsexpress)