விஜய் தொலைக்காட்சி கடந்த சில மாதங்களாக மெகா சங்கமம் நடந்து வருகிறது.
இப்போது பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 சீரியல்களின் மெகா சங்கமம் நடக்கிறது. இந்த இரண்டிற்கும் பிரவீன் பென்னட் தான் இயக்குனர் என்பதால் அவர் கதைக்கு ஏற்றவாரே இந்த மெகா சங்கமத்தின் கதையையும் அமைத்துள்ளார்.
கொஞ்சம் விறுவிறுப்பாக தான் இந்த சங்கமம் போகிறது. அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பை தூண்டுகிறது.
இந்த நேரத்தில் தான் இரண்டு சீரியல் பிரபலங்களின் வித்தியாசமான கெட்டப் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் நாம் தினமும் பார்த்து ரசித்த நடிகர்கள் ஒருவர் கூட எப்போதும் உள்ள லுக்கில் இல்லை. அவர்களின் கெட்டப்பை பார்க்கும் போது சீரியலுக்கு ஒரு கருத்துள்ள நாடகத்தை நடத்தியுள்ளார்கள் என்பது தெரிகிறது.
இதில் இன்னொரு கொண்டாட்ட செய்தி என்னவென்றால் சீரியல் நடிகர்களுடன் பிக்பாஸ் பிரபலங்கள் இணைந்துள்ளார்கள்.
ரியோ, சோம், சம்யுக்தா 3 பேரும் சீரியல் பிரபலங்களுடன் இணைந்து எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.








