தமிழ் சினிமாவில் முதல் ரூ. 1 கோடி வசூலித்தது ரஜினியின் இந்த படம் தானா?

தமிழ் சினிமாவில் இப்போது நிறைய விஷயங்கள் நமக்கு சாதாரணமாக தெரியும். உதாரணத்துக்கு பாக்ஸ் ஆபிஸை கூறலாம்.

இன்று கோடிகள் சாதாரணமாக இருந்தாலும் அன்றைய காலகட்டங்களில் ஒரு கோடி என்பது 100 கோடிக்கு சமம். ஆனால் அந்த காலகட்டத்திலும் பாக்ஸ் ஆபிஸில் முதல் சாதனை செய்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.

காமெடி நடிகர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் ராஜாதி ராஜா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்படம் ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றியைப் பெற்றது.

தெலுங்கில் இப்படம் ராஜாதி ராஜா என்ற பெயரில் டப் செய்யப்பட்டு அங்கேயும் வெற்றிக்கொடி நாட்டியது. வெற்றி பக்கா கமர்ஷியல் படமாக உருவாகியிருந்த ராஜாதி ராஜா திரைப்படம் வசூலிலும் சாதனை செய்தது.

அதாவது தமிழ் சினிமாவில் முதல் நாள் ரூ. 1 கோடி வசூலித்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இதன்மூலம் அந்த காலத்தில் இருந்தே வசூல் சக்ரவர்த்தியாக ரஜினி வலம் வந்திருப்பது தெரிகிறது.

ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான படம் தர்பார், இந்த படம் சொல்லும் அளவிற்கு வசூலில் கலக்கவில்லை என்பது தான் உண்மை.

அடுத்தபடியாக ரஜினி, சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற பெயரில் படம் நடித்துவருகிறார். கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கவுள்ளது.

விரைவில் படத்திற்கான சின்ன அப்டேட்டாவது வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.