நடிகை சுருதிஹாசன் வாரிசு நடிகை என்றாலும் கூட, முழுக்க தன்னுடைய திறமை காரணமாக தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். நடிப்பு மட்டுமல்லாமல் பாடுவது, இசையமைப்பது என்று சுருதிஹாசன் பல திறமைகள் கொண்டவர்.
தற்போது அவர் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ள லாபம் படத்திற்கான ரிலீசுக்காக காத்திருக்கிறார். நடிகர் ரவி தேஜா உடன் இணைந்து நடித்த திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி ஹிட்டடித்தது. நடிகை சுருதிஹாசன் சோசியல் மீடியா மிகவும் ஆக்டிவாக இருப்பவர்.
சுருதிஹாசன் ஏற்கனவே இத்தாலிய இசையமைப்பாளர் மைக்கேல் என்பவரை காதலித்து வந்தார். இரு வருடங்களுக்கு முன்பு இத்தாலியில் இருந்து இந்தியா வந்த மைக்கேல் கமல்ஹாசனை நேரில் சந்தித்து பேசிவிட்டு சென்றார். பின்னர், அவர்கள் இருவருக்கும் பிரேக்கப் ஏற்பட்டதால் தனது காதல் குறித்து பொது வெளியில் பேசுவதை சுருதிகாசன் தவிர்த்துவிட்டார்.
தற்போது சுருதிஹாசன் மீண்டும் காதலிப்பதாக கூறப்படுகிறது. ,இந்த நிலையில், குட்டி பையன் ஒருவனுடன் அவர் கொஞ்சி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
View this post on Instagram







