சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் நடிகை அமலாபால் சின்னத்திரைக்கு களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ‘தெய்வத்திருமகள்’ மற்றும் ‘தலைவா’ திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஏ எல் விஜய்யை நடிகை அமலாபால் திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில ஆண்டுகளிலேயே திருமண உறவில் விரிசல் ஏற்பட்டு பரஸ்பர புரிதல் அடிப்படையில் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இந்த விவாகரத்திற்கு காரணம் திருமணத்திற்கு பிறகும் நடிகை அமலாபால் தொடர்ந்து நடிக்க விரும்பியதாகவும் ஆனால், அதற்கு இயக்குனர் விஜய் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் நடிகை அமலாபால் விவாகரத்து பெற்ற பிறகும் பல்வேறு படங்களில் நடிக்கத் தொடங்கினார். மீண்டும் திரை வாழ்க்கை அவருக்கு ஏறுமுகத்தில் காணப்பட்டது மேலும் சில வெப் சீரியஸ்களிலும் நடித்தார்.
மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் கால்ஷீட் ஒதுக்க முடியாத காரணத்தினால் அந்த படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனது. இந்நிலையில், தற்போது விரைவில் ஒரு தொலைக்காட்சி தொடரில் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்தத் தொடர் சின்னத்திரையில் சிறந்த தொடராக இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரிக்கும் நிறுவனங்கள் நடிகை அமலாபாலை அணுகி வருவதாக கூறப்படுகின்றன.







