பிரபலங்களுக்கிடையே சில விஷாசங்கள் விழாக்கள் கொண்டாட்டங்கள் என ஆரம்பித்தால் அவர்கள் இரவு பார்ட்டி வைத்து கும்மாளம் போடுவது வழக்கம்.
அந்தவகையில் சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவியுடன் சண்டை போட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
மதுபோதையில் பட்டப்பகலிலேயே இப்படி குடித்துவிட்டு சண்டை போடுகிறார்களே என்று சமுகவலைத்தளத்தில் கருத்துகளை தெரிவித்து வந்தனர்.
ஆனால், அங்கு நடந்தது வேறு ஒன்றாம். ஜெயம் ரவியின் தனி ஒருவன் படத்தின் வெற்றியை கொண்டாட பிரபலங்களுக்கு படக்குழு பார்ட்டி கொடுத்திருக்கிறது. அதற்கு திரிஷா, தனுஷ் அவர் மனைவி ஐஸ்வர்யா தனுஷும் சென்றுள்ளனர்.
அங்கு ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியும் தனுஷும் நட்பு ரீதியான உரையாடலில் இருந்துள்ளனர். அப்புகைப்படத்தில் தனுஷ் சிரிப்புடன் தான் ஆர்த்தியுடன் பேசி இருக்கிறார். ஆனால் அதை பலர் சண்டை என பொய் பிம்பத்தை உருவாக்கி வைரலாக்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது.