பிரபல டிக் டாக் இலக்கியா நடித்த ‘நீ சுடத்தான் வந்தியா’ என்ற படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
பிரபல டிக் டாக் இலக்கியா தனது டிக் டாக் பக்கத்தில் சினிமா பாடல்களுக்கு தனது கவர்ச்சியான நடனங்களின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டவர். கடந்த ஆண்டு மத்திய அரசினால் டிக் டாக் ஆப் தடைசெய்யப்பட்டது.
இதனையடுத்து மற்ற ஆப் களிலும் தனது வீடியோவை பதிவேற்றம் செய்து வந்தார். இந்நிலையில் தற்போது சினிமாவில் நடிகையாக அறிமுகமாக உள்ளார் இலக்கியா.
தற்போது அந்தப் படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு படக்குழு ‘நீ சுட தான் வந்தியா’ என்ற வித்தியாசமாக தலைப்பை வைத்துள்ளனர். இந்தப் படம் கிட்டத்தட்ட பி கிரேட் படம் போல உருவாகி உள்ளது.