தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து அதிக வசூல் சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தல அஜித் நடிப்பில் இயக்குனர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பில்லா.
ரஜினியின் பழைய பில்லா படத்தை ரீமேக் செய்து உருவான பில்லா (2007) திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது.
மேலும் தல அஜித் முதலில் ரஜினி நடிப்பில் கடந்த 1981 ஆம் ஆண்டு வெளியான தீ திரைப்படத்தை தான் ரீமேக் செய்ய விரும்பினாராம். ஆனால் பின்னர் பில்லாவை தேர்ந்தெடுத்து அப்படத்தை ரீமேக் செய்ததாக கூறப்படுகிறது.