இராணுவ சிப்பாய்களை ஏற்றிச்சென்ற பஸ் விபத்து..!!

புகையிரத கடவையில் எச்சரிக்கை சமிஞ்சை மீறி இராணுவ சிப்பாய்களை ஏற்றிச்சென்ற பஸ்ஸை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சாரதிக்கு எதிராக மோட்டார் வாகன சட்டவிதிகள் மற்றும் குற்றவியல் சட்டவிதிகளுக்கு கீழ் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹன தெரிவித்தார்.

வனவாசல பகுதியில் நேற்று புகையிரதத்தின் வருகையை குறிக்கும் வகையில் சமிஞ்சை விளக்கு ஒளிர்ந்த போதும் , அதனை பொருட்படுத்தாத சாரதி ஒருவர் பஸ்ஸை செலுத்தியதில் அது புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

மேலும் அந்த விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.