ஸ்ரீ ரெட்டியுடன் கைகோர்க்கும் விஷால்.?!

தன்னுடைய திருமணம் நின்று போனது ஏன் என்பது குறித்து முதல்முறையாக மனம் திறந்து பேசி இருக்கின்றார் பிரபல நடிகர் விஷால்.

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷால். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியாகிய சக்ரா திரைப்படம் ஓரளவு சுமாரான வரவேற்பை பெற்றது.

கடந்த வருடம் விஷாலுக்கு தெலுங்கு நடிகையான அனிஷாவுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்தவித சத்தமுமின்றி இருவரும் பிரேக்கப் செய்து விட்டனர். இவர்கள் அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து அனுஷாவிற்கு சில தினங்களுக்கு முன்பாக வேறொருவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

இத்தகைய சூழலில், தற்போது தனது திருமணம் நின்று போனதன் காரணம் என்ன என்பது குறித்து நடிகர் விஷால் தெரிவித்துள்ளனர்.

எனது திருமணத்தில் என்னையும் மீறி சில விஷயங்கள் கை மீறிச் சென்று விட்டது. இப்போ நான் சிங்கிள் தான் மிங்கிளாக ரெடியாக உள்ளேன் என்று தெரிவித்து இருக்கின்றார். இதை கேட்ட நெட்டிசன்கள் பலரும், ஸ்ரீரெட்டி ரொம்ப நாளா வெயிட்டிங் என்று கூறி கிண்டல் செய்து வருகின்றனர்.