தாயைப்போல பிள்ளை.. அர்ச்சனா மகளின் அட்டூழியம்.!

தொகுப்பாளினி அர்ச்சனா பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவராலும் வெறுப்பை சம்பாதித்தார். வைல்ட் கார்டு என்றீயாக பிக்பாஸ் வீட்டில் நுழைந்த அவர் வீட்டிற்குள் குரூப்பிசத்தில் ஈடுபட்டதால் வெகுவாக மக்களிடம் விமர்சனங்களைப் பெற்றார்.

தொடர்ந்து அன்பு கேங் என்று உருவாக்கி பலரது திறமைகளையும், மழுங்கடிக்கும் விதமாக எமோஷனலாக அவர்களை அடிமை ஆக்கும் முயற்சியில் அர்ச்சனா ஈடுபட்டார்.

இதனால், சமூக வலைதளங்களில் அர்ச்சனாவை பலரும் படு மோசமாக விமர்சித்தனர். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் அர்ச்சனா தனது கேரியரை போச்சி என்று புலம்பினார். பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனா இருந்த பொழுது விமர்சிக்கப்படும் நேரத்தில் அவருடைய மகள் அவருக்கு ஆதரவாக பதிலடி கொடுத்து வந்தார்.

தற்போது பிக்பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியிலும் அர்ச்சனாவின் மகள் பதிலடி கொடுப்பது தொடர்ந்தது. இதுகுறித்து நெட்டிசன் ஒருவர் உங்கள் வயதுக்கு இது ரொம்ப அதிகம். ஓவர் மெச்சூரிட்டி, ஆட்டிட்யூட் காட்டாதீர்கள். செட்டாகவில்லை. குழந்தை போல நடந்து கொள்ளுங்கள் என்று கூறினார். இதைக்கேட்ட அர்ச்சனாவின் மகள் அதற்கும் பதிலடி கொடுத்துள்ளார். தற்போது இந்த பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.