பல்வேறு நடிகைகள் யூடியூப் மற்றும் இதர தொலைக்காட்சிகளில் பேட்டிகள் கொடுக்கும்பொழுது தங்களது வாழ்வில் ஏற்பட்ட கஷ்டங்கள், துயரங்கள், பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாக பேசுவது வழக்கம்.
அந்த வகையில், வெள்ளித்திரையில் கால்பதிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் சீரியல் நடிகை ஆயிஷா. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சத்யா என்ற தொடரில் நடித்து வருகிறார். சமீபத்தில் திருமண காட்சி ஒன்று இந்த தொடரில் படமாக்கப்பட்டது.
அப்போது திருமண புடவையை கட்டுவதற்கு கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்குமேல் ஆனதாக அவர் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பிற்கு நேரமாகிவிட்டது என்று இயக்குனர் கதவை தட்டிக் கொண்டே இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அவர் திடீரென்று கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்துவிட்டார் என்று ஆயிஷா தெரிவித்துள்ளார்.
அப்பொழுது அரைகுறையாக உடை மாற்றிக் கொண்டிருந்த நடிகை ஆஷா கதவுக்கு பின்னால் ஒளிந்து கொண்டதாகவும், அதன்பின்னர் மேலாடையை அணிந்து கொண்டு அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். படப்பிடிப்புக்கு நேரம் ஆகிவிட்டது என்பதை கூற தான் ஆயிஷா இப்படி பல்வேறு விஷயங்களை தெரிவித்து கூறியுள்ளார்.