நக்மாவின் முடிவுக்கு காரணம் அந்த கிரிக்கெட்டர் தானா.?!

ஒரு காலத்தில் நடிகை நக்மா இடம் பெறாத சினிமாவே இல்லை என்ற ரேஞ்சுக்கு கொடிகட்டிப் பறந்தவர். இருப்பினும், தற்போது அவருக்கு 50 வயதைக் கடந்த நிலையிலும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

நக்மாவும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலியம், காதலித்து வந்ததாக அப்பொழுது ஒரு வதந்தி பரவியது. தற்போது நடிகை அனுஷ்கா ஷர்மா, விராட் கோலியுடன் போட்டிகளில் கலந்து கொள்வது போல, நக்மா கங்குலியின் அனைத்து போட்டிகளிலும் தவறாமல் கலந்து கொள்வாராம்.

ஆனால் நக்மா கலந்துகொள்ளும் போட்டிகளில் கங்குலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், கங்குலியின் தோல்விக்கு நக்மா தான் காரணம் என்று பலரும் கிசுகிசுக்க ஆரம்பித்தனர்.

தன்னால் கங்குலி விமர்சனத்திற்கு உள்ளாகி இருப்பதை கண்ட நக்மா அவரிடமிருந்து பிரிந்து வர முடிவெடுத்து இருவரும் பேசி தங்களது காதலை முறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

முன்னதாக கங்குலி திருமணமானவர் என்பதால் நக்மா பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. கங்குலியை நக்மா காதலித்து வந்ததால் தான் நக்மா இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.