தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வருகிறார். கடந்த வருடம் மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதை கீர்த்தி சுரேஷ் பெற்றார்.
தற்போது நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்தகைய சூழலில், மூன்று மாதங்களுக்கு முன்பாக பிறந்தநாள் கொண்டாடிய அனிருத்துக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து அவருடன் மிக நெருக்கமாக இருக்கின்ற இரு புகைப்படங்களை வெளியிட்டு இருந்தது, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பல்வேறு தகவல்கள் கிசுகிசுக்கப்படுகின்றது.
இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் மற்றும் அனிருத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவும் இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என்றும், இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமான நண்பர்கள் அவரவர் வேலையில் இருவரும் பிஸியாக இருக்கின்றனர். இந்த விஷயம் முற்றிலும் பொய் என்றும் தெரிவித்துள்ளனர்.








