முதல் முறையாக வெளியான மறைந்த நடிகர் சிரஞ்சீவி மகனின் புகைப்படம்..

கன்னட திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வந்தவர் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா. நடிகர் அர்ஜுனின் மருமகன் தான் இவர்.

நடிகர் சிரஞ்சீவி சார்ஜா சென்ற வருடம் பாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவரின் இறப்பு இந்திய திரையுலகில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இவர் மரணித்தபோது நடிகையும், இவரது மனைவியுமான மேகனா ராஜ் கர்ப்பமாக இருந்தார். மேலும் சில மாதங்களுக்கு முன்பு தான் நடிகை மேகனா ராஜுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் இதுவரை தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்த நடிகை மேகனா ராஜ், முதல் முறையாக வீடியோவுடன் தனது கணவர் மீண்டும் பிறந்துள்ளார் என தன் குழந்தையை வெளியுலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இதோ அந்த வீடியோ..

 

View this post on Instagram

 

A post shared by Meghana Raj Sarja (@megsraj)