காதலர் தினத்தை மிகவும் சிம்பிள்ளாக கொண்டாடிய நடிகை காஜல், அதுவும் தமிழ்நாட்டில்..!

நடிகை காஜல் அகர்வால் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்கியவர், தமிழில் கடைசியாக கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும் நடிகை காஜல் அகர்வாலுக்கும் கவுதம் கிட்ச்லு என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

அதுமட்டுமின்றி இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்துள்ள லைவ் டெலிகாஸ்ட் என்ற சீரிஸ் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகை காஜல் தற்போது அவரின் ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாட்டில் அவருக்கு பிடித்த ஹோட்டல் குறித்து பதிவிட்டு, அங்கு அவரின் கணவருடன் சென்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

ஆம், பொள்ளாச்சியில் உள்ள சாந்தி மெஸ் தான் அவருக்கு பிடித்த இடமாம். அங்கு உள்ளவர்கள் மிகுந்த அன்புடன் சாப்பாடு பரிமாறுவதாகவும்.

அதனால் தான் அவர்களின் உணவு கடந்த 27 வருடங்களாக சுவையாக உள்ளது என்றும், நானும் 9 வருடங்களாக அவர்களின் உணவகத்திற்கு தான் சென்று கொண்டு இருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.