பங்களா வீட்டை விற்ற நடிகை!

விஜய்யுடன் தமிழன் படத்தில் ஜோடியாக நடித்தவர் பிரியங்கா சோப்ரா. ஹிந்தி சினிமாவின் டாப் ஹீரோயினான இவர் அதிகம் சம்பளம் வாங்கி வந்தார்.

பெரும் மார்க்கெட்டும் அவருக்கு உள்ளது. ஹாலிவுட் படங்களிலும் நடித்து வந்த அவர் தன்னை விட 10 வயது குறைய பாடகர் நிக்கி ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் குடியேறினார்.

அங்கும் இருவரும் இணைந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள பிரம்மாண்ட வீட்டை விலைக்கு வாங்கினர்.

மும்பையை பூர்வீகமாக கொண்ட பிரியங்கா அங்கு தான் வசித்து வந்த சொகுசு வீட்டை விற்றுவிட்டாராம்.

அந்த வீட்டை தற்போது நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் ரூ 7 கோடி கொடுத்து வாங்கியுள்ளாராம்.

 

View this post on Instagram

 

A post shared by Manav Manglani (@manav.manglani)