தமிழில் அட்டகத்தி என்ற படத்தின் மூலமாக பிரபலமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இந்த படத்தை தொடர்ந்து, எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி உள்ளிட்ட அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
நந்திதா ஸ்வேதா தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கின்றார். இறுதியாக நந்திதா தமிழில் நடித்த படம் அசுரவதம் தற்போது நந்திதா ஸ்வேதா கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற படத்தில் தான் நடிப்பேன் என்ற ரீதியில் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.
ஐபிசி 376 என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகின்றார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதற்கிடையில், அடுத்த பட வாய்ப்புகளை நோக்கி நகரும் இதமாக இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து கவர்ச்சி புகைப்படங்களை அவர் வெளியிட்டு இருக்கின்றார்.
தற்போது, அவர் எக்குத்தப்பாக உடலை காட்டி போட்டோஷூட் நடத்தி நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
View this post on Instagram