பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக நடிகை சாக்ஷி அகர்வால் கலந்துகொண்டார். தற்போது அவர் 5 திரைப் படங்களில் கமிட்டாகியிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அதில் மூன்று படங்களின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
இத்தகைய சூழலில் அரண்மனை3 ,டெடி உள்ளிட்ட படங்கள் விரைவில் ரிலீசாக இருப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். சாக்ஷி அகர்வால் திடீரென்று ஒப்பந்தமான திரைப்படம் தி நைட். இந்த படம் தமிழ் தெலுங்கு இந்தி என்று மூன்று மொழிகளில் வெளியாக இருக்கின்றது.
இத்தகைய சூழலில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி இருக்கிறது. இந்த படம் திரில்லர் கதை என்பது அந்த போஸ்டரை பார்த்தாலே தெரிகிறது. இதில் கதாநாயகியாக சாக்ஷி அகர்வால் நடித்து இருப்பது அனைத்தையும் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது. இந்த படம் சம்மரில் வெளியாகும் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.








