கவர்ச்சிக்கு பெயர் போன நடிகை நமீதா முதன்முறையாக தயாரித்து நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் அவரது முதல் தயாரிப்பு படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்றது. அப்போது நமீதாவின் காட்சிகளும் எடுக்கப்பட்டது. படப்பிடிப்பை காண ஊர் மக்கள் திரளாக கூடி வேடிக்கை பார்க்க வந்துள்ளனர்.
அப்போது நமீதா பேசிக்கொண்டிருந்த செல்போன், கிணற்றில் தவறி விழுந்தது அதை பிடிக்க நமிதாவும் கிணற்றில் குதித்துள்ளார். இதை வேடிக்கை பார்க்க வந்த மக்கள் நமீதாவை காப்பாற்ற முயன்றுள்ளார்கள்.
ஆனால், அவர்களை படக்குழுவினர் தடுத்துள்ளனர். பிறகு தான் அது படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சி என தெரியவந்துள்ளது. இருந்தும் சமூகவலைதளங்களில் நமீதா கிணற்றில் தவறி விழுந்து விட்டதாக செய்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.







