குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ்.!

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இவருடைய நடிப்பில் வெளியான காக்கா முட்டை என்ற திரைப்படத்தின் மூலமாக அவர் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்.

இதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை, கனா போன்ற பல வெற்றித் திரைப்படங்களை அவர் கொடுத்து ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கின்றார். நடிப்பு ஒருபுறம் இருந்தாலும் கூட ஐஸ்வர்யா ராஜேஷ் சமையலில் அதிகம் ஆர்வம் கொண்டவர்.

சமூக வலைதளப் பக்கத்தில் அவர் தோசை சுட்ட வீடியோவையும், குக்கீஸ் செய்த வீடியோவையும் இணையதளத்தில் வெளியிட்டு இருக்கின்றார். இதுமட்டுமின்றி முன்னதாக அவர் இதுவரை சமைத்ததை கூட சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கின்றார்.

இந்த பதிவுகளை கண்ட ரசிகர்கள் நீங்கள் விஜய் டிவி, ‘குக் வித் கோமாளி சீசன் 3’ நிகழ்ச்சிக்கு வந்து விடுங்கள் என்று கூறியுள்ளனர். ரசிகரின் இந்த ஆசையை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்துதான் காண வேண்டும்.