டிக்கெட் பினாலே டாஸ்கில் பாலா கேபி இடையே நடந்த கடும் போட்டி..

பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது டிக்கெட் பினாலே டாஸ்க் மூலம் செம்ம சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது.

இதுவரை நடந்த போட்டிகளில், அனைவரும் போட்டியிட்டு விளையாட பாலா, ரியோ, ரம்யா பாண்டியன் இவர்களே அதிக புள்ளிகளை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இன்றைக்கான முதல் ப்ரோமோ காட்சியில், ஒவ்வொரு ஹவுட்மேட்டும் மற்ற போட்டியாளர்களுடன் போட்டியிட வேண்டும், இந்த டாஸ்கில் பந்தை உருண்ட படி எடுத்து வளையத்திற்குள் வேகமாக வைக்கவேண்டும், இதில் பாலா அனைத்து போட்டியாளர்களுடனும் விளையாடி இறுதி வரை வருகிறார்.

ஒரு கட்டத்தில், சோம் சேகரிடம் போட்டியிடும் கேப்ரில்லா இருவரும் சமநிலை அடைகிறார்கள் யார் வெற்றி பெறுவார்கள் இன்றைய நிகழ்ச்சியில் தான் தெரியவரும்.