ஆதித்திய வர்மா படத்தில் மீரா என்னும் கதாபாத்திரத்தில்நடித்தவர் பனித்தா சந்து. இவர் ஹிந்தியில் ‘அக்டோபர்’ என்னும் திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.
இவர் 2019-ம் ஆண்டு வெளிவந்த ஆதித்திய வர்மா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். மேலும் இவர் சிறு வயதிலிருந்து தொலைக்காட்சி தொடர்களின் குழந்தை கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார்.
அர்ஜுன் ரெட்டி என்ற தெலுகு காதல் திரைப்படம் தமிழில் ஆதித்திய வர்மா என்று எடுக்கப்பட்டது. இதன் மூலம் பணித்தா சந்துவுக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கூட்டம் குவிந்தது. இவர் எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார்.
இந்நிலையில், தற்போது அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் அவரை மருத்துமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றனர். அப்போது அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது தான் வர மாட்டேன் என்று அடம்பிடித்துள்ளார். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் இறங்கி வராததால் பின்னர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.







