தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராகவும், பல குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தியவர் தான் நடிகர் சாம்ஸ்.இவர் இதுவரை தமிழில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முக்கிய நடிகரான இவரின் மகன் தற்போது ஹீரோவாக அறிமுகமாக உள்ளார், ஆம் நடிகர் சாம்ஸ்-ன் மகன் யோஹன் என்பவர் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகவுள்ளார்.
இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வரும் யோஹன், அவர் இயக்கத்திலே ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக நடிகர் சாம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதோ அவரின் புகைப்படங்கள்..
இனிப்பான செய்தி என் மகன் "யோஹன்" ( YOHAN )
கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சியும் , @BOFTAindia வில் இயக்குனர் பயிற்சியையும் முடித்து தற்பொழுது #directorram அவர்களிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றியபடி நடிகனாக களமிறங்க தயாராகிவிட்டார்.
உங்கள் ஆசி + ஆதரவை வேண்டுகிறேன் 🙏 pic.twitter.com/cijjJzQ5md— @ACTOR CHAAMS (@ACTOR_CHAAMS) January 4, 2021







