தளபதி விஜய்யின் மகன் ஜாசன் சஞ்சய் திரையுலகில் ஆர்வமாக இருப்பதாக சில தகவல்கள் சென்ற வருடம் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் கூடிய விரைவில் நடிகர் விஜய்யின் மகன் திரையுலகில் என்ட்ரி கொடுக்க போகிறார் என்று தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது.
ஆம் தளபதி விஜய்யிடம், நடிகர் விஜய் சேதுபதி நான் தயாரிக்கவுள்ள ஒரு படத்தில் உங்கள் மகனை ஹீரோவாக நடிக்க வைக்க முடியுமா என்று கேட்டிருந்தாராம் விஜய் சேதுபதி.
இதற்கு விஜய் இது என்னுடைய முடிவு கிடையாது, இது முழுக்கமுழுக்க சஞ்சய்யின் முடிவு தான் என்று கூறியிருந்தாராம்.
ஆனால் விஜய்யின் மகன் சஞ்சய்க்கு நடிப்பை விட, இயக்கத்தில் ஆர்வம் உண்டு என்று தெரிந்ததே.
இருந்தாலும் இந்த ஆண்டு கண்டிப்பாக ஜாசன் சஞ்சய் திரையுலகில் அறிமுகமாக வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்படுகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நிகழ போகிறது என்று..







