தளபதி 65 படத்தின் கதாநாயகி இவர் தானா..வெளியான தகவல்..!!

மாஸ்டர் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனது அடுத்த படத்தை நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. மேலும் மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்த படத்திற்கும் அனிருத் இசையமைக்க போகிறார்.

இந்த நட்சத்திரங்களின் பெயர் வெளிந்தாலும், இதுவரை தளபதி விஜய்யுடன் ஜோடியாக நடிக்க போவது எந்த கதாநாயகி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் தளபதி 65 படத்தின் கதாநாயகி தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ‘ பூஜா ஹெக்டே ‘ என்று சமூக வலைத்தளத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை, என்பது குறிப்பிடத்தக்கது.