ஆரியிடம் பாலாவைத் தொடர்ந்து ரியோவா?…

பிக்பாஸ் வீட்டில் இரண்டாவது ப்ரொமோ காட்சியில் ஆரி மற்றும் பாலா இருவரும் ஓய்வறைக்குச் சென்றுள்ளதாக காட்டப்பட்ட நிலையில், தற்போது ரியோவுடன் வாக்குவாதம் செய்யும் காட்சி வெளியாகியுள்ளது.

வெளியில் ரசிகர் பட்டாளத்தினை அள்ளிக் குவிக்கும் ஆரியை உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் கட்டம் கட்டி சண்டையிட்டு வருகின்றனர்.

ஆரிக்கும் பாலாவிற்கும் சண்டை ஏற்பட்ட நிலையில், ரியோவிற்கும் ஆரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அவதானித்த ரசிகர்கள் ஆரி மீது ஏன் இவ்வளவு பொறாமை என்று சக போட்டியாளர்களை விளாசி வருகின்றனர்.